நடிகர் சத்யராஜின் மகளா இது? தமிழக அரசுக்கு என்ன கடிதம் எழுதியுள்ளார் தெரியுமா? புகைப்படமா உள்ளே!

சத்யராஜ் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றி வருகிறார். அந்தத் துறையில் பிஎச்டி படிப்புக்கான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார். அவர் சினிமாவில் நடிப்பதாக அடிக்கடி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனை அவரும் அவ்வப்போது மறுத்து வந்தார். இந்த நிலையில் வடிவேல் என்பவர் தயாரிக்கும் படத்தில் திவ்யா நாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகின.

கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக இரும்பு சத்துள்ள மருந்துகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள சத்யராஜ் மகள் திவ்யா அது தொடர்பாக அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு திவ்யா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், பெண்களின் இரும்பு சத்து குறைபாட்டை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இரும்புச்சத்து குறைபாடு கர்ப்பிணிக்கு மட்டுமின்றி பிறக்கும் குழந்தைக்கும் ஆபத்தானது என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு இலவசமாக இரும்பு சத்துள்ள மருந்துகளை வழங்க வேண்டும்.