200 பெண்கள், 4 ஆண்கள்,1500 வீடியோக்கள் ! மிரண்ட போலீஸ் அதிகாரிகள்.. .. நடுங்க வைக்கும் பொள்ளாச்சி பாலியல் கிரைம்! இதயம் பலவீனமானவர்கள் தவிர்க்கவும் !

பொள்ளாச்சியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் உரிய நடவடிக்கைக் கோரி பிரபலங்கள் பலர் குரலெழுப்பி வரும் நிலையில், தற்போது இந்த விவகாரம் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம் தமிழகத்தை உலுக்கியது. இதுதொடர்பான வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்களால் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சுமார் 20 பேருடன் இந்த கும்பல் இயங்கி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட விடீயோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது