பிரபல நடிகர் கண்ணீருடன் கூறிய இரங்கல்..! ஜே.கே ரித்திஷ்க்கு சொன்ன வார்த்தை!

பலருக்கு உதவிக்கரம் நீட்டி இன்னல் துடைத்த நண்பர் நடிகர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரித்திஷ். ரித்திஷ் தற்போது அதிமுகவில் இருந்தார். ராமநாதபுரத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக போகளூர்  என்கிற இடத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் மரணமடைந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது மரணத்திற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசியல் பிரமுகர்கள் அனைவரும் அவர்களது இரங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

குறிப்பாக நடிகர் விஷால் கூறுகையில் ஜே.கே. ரித்திஷ் மறைவு மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது; ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டேன் என்று கண்ணீருடன் தன் இரங்களைத தொரிவித்துள்ளார்.