தளபதி விஜயின் பிகில் பட போஸ்டரில் ரோபோசங்கரின் மகள்… அதுவும் எங்க நிற்கிறார்னு பார்த்தேங்களா?

தளபதி விஜயின் பிகில் பட்த்தின் சிங்கப்பெண்ணே பாடல் இணையத்தில் லீக்கானதால், இந்த படத்தின் பாடல் எப்படியும் விரைவில் வந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதே போன்று நேற்று நேர்கொண்ட பார்வை படத்தின் தீம் மியூசிக் பாடல் வெளிவர, பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் வரும் 23-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வாக அறிவிக்கப்பட்டது. அதில் தளபதில் விஜயுடன் கால்பந்திற்கு விளையாடும் பொண்களும் இருந்தனர். ஆனால் கால்பந்திற்கு 11 பேர் வேண்டும், ஆனால் 10 பேர் மட்டுமே இருந்ததால், அந்த ஒரு பெண் நிச்சயமாக நயன் தாரா தான் என்று கூறப்பட்டு வருகிறது. இதை படக்குழு சஸ்பென்சாக அறிவிக்கும் என்ற தகவலும் வெளியானது.

இந்நிலையில் தற்போது நேற்று வெளியான பிகில் படத்தின் போஸ்டரில் ரோபோ ஷங்கரின் மகள் இருந்துள்ளார். அதுவும் அவர் பக்கத்தில் நிற்கும் பெண் பெரிய கால்பந்தில் கை தேர்ந்தவர் எனவும், இதில் படத்தின் முக்கிய கட்டத்தின் போது ரோபோ ஷங்கர் மகள் மற்றும் அவரை வைத்து தான் நகரும் என்று கூறப்படுகின்றனர்.