நடுரோட்டில் இளம் பெண்ணை கட்டி அணைத்து தொடக் கூடாத இடத்தில் தொட்ட பைக் இளைஞன்! பட்டப்பகலில் பரபரப்பு!

ஹைதராபாத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் ஒரு நபர் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்டது தொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தின் எல்.பி. நகரைச் சேர்ந்த 19 வயதுப் பெண் கடந்த 12-ஆம் தேதி சாலையில் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தனது முகத்தை துணியால் முடிக்கொண்டு அந்தப்பெண்ணை நெருங்கி தொடக்கூடாத இடங்களில் தொட்டும், கட்டியணைத்தும் அத்துமீறல்களில் ஈடுபட்டுவிட்டு வேகமாகச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.  அந்த வழியாகச் சென்ற டண்டி ரவி என்பவர் நடந்த அனைத்தையும் கவனித்த நிலையில் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் இருசக்கர வாகன அடையாளம் உள்ளிட்டவற்றை மேற்கொண்ட போலீசார் கர்லாபதி சிவா ரெட்டி என்ற நபரை கைது செய்தனர். தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த நபர்,  கடந்த மாதம் வேறு சைதன்யபுரி என்ற இடத்திலும் ஒரு பெண்ணிடம் இதே பாணியில் அத்துமீறியதை ஒப்புக்கொண்ட நிலையில் இரு காவல் நிலையங்களிலும் அந்த நபரில் பேரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.