விஜய் டிவியால் பிரிந்த மேலும் 2 ஜோடி! கணவனை கழட்டிவிட்ட பொன்மகள் வந்தால் மேக்னா! மனைவியை ஒதுக்கி வைத்த விக்கி!

பொன் மகள் வந்தாள் சீரியல் ஜோடி விக்கி, மேக்னா இருவரும் நிஜ வாழ்வில் திருமணம் செய்துகொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன் மகள் வந்தாள் என்ற சீரியலை விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது. இந்த சீரியலில் விக்கி ஹீரோவாக நடித்து வருகிறார். இதில், முதலில் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்ட ஆயிஷா சில எபிசோடுகள் நடித்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக, விலகி விட்டார். இதன்பின் மேக்னா என்பவர்ஹீரோயினாக நடித்து வருகிறார். விக்கிக்கும், மேக்னாவிற்கும் இடையே எதோ நெருக்கம் ஏற்பட்டுவிட்டதாக, ஆரம்பம் முதலே பொன்மகள் வந்தாள் சீரியல் குழுவினர் தெரிவித்து வந்தனர். இதனை உறுதி செய்வது போன்ற தகவல்கள் தற்போது வெளியாக தொடங்கியுள்ளன. ஆம். சீரியலை மிஞ்சும் வகையில் இந்த உண்மைக் கதை உள்ளது.


விக்கி ஏற்கனவே ஹரிப்ரியா என்பவரை திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இதேபோல,மேக்னாவும் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டார். ஆனால், பொன்மகள் வந்தாள் சீரியலில் நடிக்க தொடங்கிய நாள் முதலாக, இருவரும் கணவன், மனைவியாகவே வாழ தொடங்கிவிட்டார்களாம். அதாவது, மேக்னாவின் கணவர் தரப்பில் எந்நேரமும் பணம் சம்பாதிக்கும்படி டார்ச்சர்.

அதேபோல, விக்கியின் மனைவி தரப்பில் அடிக்கடி சந்தேகம். இந்த பிரச்னைகளால், இருவருமே தங்களது திருமண வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு, புதியதாக திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்களாம்.

முதலில், சட்டப்படி தங்களது முதலாவது திருமணத்திற்கு முடிவு கட்டிவிட்டு, பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள்என, பொன்மகள் வந்தாள் சீரியல் குழுவினர் குறிப்பிடுகின்றனர். இது கேட்பதற்கு சீரியலை மிஞ்சும் பரபரப்பு கதையாக உள்ளது.