கணவனுக்கு துரோகம் செய்த நீ… எனக்கு எப்படி துரோகம் செய்யாமல் இருப்பாய்: லாட்ஜில் காதலன் வெறிச்செயல்

கடலூர் மாவட்டம் முருகன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி. இவருக்கும் மோகனாவுக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஊரிலிருந்து புறப்பட்ட இருவரும், பெரியமேடு பகுதிக்க்கு வந்து அங்கிருக்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது வீராச்சாமி மது அருந்தியுள்ளார். அதுமட்டுமின்றி கஞ்சா போதையில் இருந்த இவர்,உன் கணவனுக்கு துரோகம் செய்த நீ, எனக்கு துரோகம் செய்ய மாட்டாய் என்று என்ன நிச்சயம் என்று கேட்டு மோகனாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த தகராறு முற்றியதால், தனது வேட்டியால் மோகனாவின் கழுத்தை இறுக்கியத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்

அறையில் இருந்த மின் விசிறியில் மோகனாவை தூக்கில்தொங்க விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். விடுதி ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில், விரைந்து வந்த பொலிசார் அவரை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர். அவரிடம் பொலிசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.