மகளை போட்டுத்தள்ளிவிட்டு தானும் தூக்கிட்டுகொண்ட நடிகை.. ! அதிர்ச்சி தரும் காரணம்

ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தவர் பிரகன்யா. இவர் புனேவில் உள்ள கண்வாய் என்னும் பகுதியில் தனது கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், சமீபகாலமாக பிரகன்யாவிற்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு பெரிதாக இல்லை. இதனால் மிகவும் விரக்தியடைந்திருந்தார் பிரகன்யா. இந்நிலையில் நேற்று காலை நடிகை பிரகன்யாவின் கணவர் பார்கர் காலை 9 மணி அளவில் ஜிம்முக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய போது வீட்டில்  அவரது மனைவி பிரகன்யா தூக்கில்தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மற்றொரு அதிர்ச்சியாக தன்னுடைய மகளும் இறந்த நிலையில் கிடப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில்,

அவரது மனைவி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில் “எங்களுடைய மரணத்திற்கு எவரும் காரணம் இல்லை ..நான் தான் என் மகளைக் கொன்றுவிட்டு நானும் தூக்கில்தொங்கினேன் ” என்று எழுதி இருந்தார். இதனை பார்த்து பார்க்கர் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இந்த கடிதத்தை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.