விஜய் டிவி மாகாபா மற்றும் பிரியங்கா செய்த மோசமான செயல்..!! போராட்டத்தில் இறங்கிய பிரபல நடிகை ! காரணம் என்ன தெரியுமா?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளராக உள்ள நடிகை ஸ்ரீபிரியா, ட்விட்டரில்  சமூக நிகழ்வுகள் பற்றி கருத்து தெரிவிப்பது வழக்கம். இதன்படி, விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் மாகாபா மற்றும் பிரியங்கா ஆகிய தொகுப்பாளர்கள் மற்றவர்களை உருவத்தின் அடிப்படையில் மிகவும் காயப்படுத்தும் வகையில் கேலி செய்ததாகக் கூறி, ஸ்ரீபிரியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”மாகாபா, பிரியங்கா ஆகியோரின் நிகழ்ச்சி தொகுப்பு திறமை வியப்பு அளித்தாலும், உங்களது நிகழ்ச்சியில் பங்கேற்கும் நபர்களை உருவ அடிப்படையில், மூக்கு சரியில்ல, குண்டாக உள்ளார்.

என்பது போன்ற கேலி, கிண்டல் செய்வது ஏற்புடையதல்ல,” என விமர்சித்துள்ளார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து பலரும் கமெண்ட் பகிர்ந்து வருவதால் ட்விட்டரில் இது பேசப்படும் பொருளாக மாறியுள்ளது.