பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாரா கவின்! அதிர்ச்சியில் ரசிகர்கள். தீயாய் பரவும் புகைப்படம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவீன் வெளியே சென்று விட்டதாக கூறி அதிர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இந்த வாரம் நடைபெற்று வரும் freeze டாஸ்க்கில் சாண்டியின் மனைவி உள்ளே சென்றதாகவும், இதன் போது கவினின் அம்மா விடயத்தை கூறியதால் தான் அவர் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்ட போது எவ்வாறு கண்கள் கட்டப்பட்டு அழைத்து செல்லப்பட்டாரோ அதே போன்று குறித்த புகைப்படத்தில் கவீன் கண்கள் கட்டப்பட்டுள்ளது.

குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். எனினும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவீன் வெளியேற்றப்பட்டமைக்கான உத்தியோக பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாக வில்லை.