அவ அழகா இருப்பா!.. 6 ஆண்டுகளுக்கு பின் வந்த மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்! காரணம் என்ன???

சென்னையின் புழல் திருவள்ளூர் தெருவில் வசித்து வருபவர் வெற்றி வீரன்(வயது 48), இவரது மனைவி சஜினி(வயது 39). கேரளாவை சேர்ந்த சஜினியை வெற்றி வீரன் காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். திருமணமாகி 21 ஆண்டுகள் ஆன நிலையில், சில வருடங்களுக்கு முன் வீட்டில் பிரச்சனை வெடித்தது. அழகுக்கலை நிபுணரான சஜினியின் கையில் டாட்டூ போட்டுள்ளார், இதை பற்றி கேட்டபோது வெற்றிவீரனுக்கும், சஜினிக்கும் சண்டை நடந்தது.

அடிக்கடி பிரச்சனை எழ சஜினி கோபித்து கொண்டு 6 ஆண்டுகளுக்கு முன்பே தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். வெற்றிவீரன் தன் இரு மகள்களுடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன் மனைவியை சமாதானப்படுத்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரு மகள்கள் உறவினர் வீட்டுக்கு சென்ற போது, இருவரும் தனியாக இருந்த போது மீண்டும் வாக்குவாதம் நடந்தது. காலை வரை சண்டை நீடித்ததில் ஆத்திரத்தில் இருந்த வெற்றிவீரன் சமையலறை கத்தியை கொண்டு சஜினியின் கழுத்தை அறுத்துள்ளார்.

பதற்றத்தில் உடனடியாக பொலிஸ் நிலையத்துக்கும் சென்று தன்னுடைய மனைவியை தீத்துக்கட்டிவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதனை தொடர்ந்து சஜினியின் சடலத்தை கைப்பற்றிய பொலிஸ் அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.