அடடே.. பிரபல நடிகை திரிஷா மிஸ் சென்னை பட்டம் வென்றவரா?…வைரலாகும் புகைப்படம்… உள்ளே…

நடிகை திரிஷா மிஸ் சென்னை பட்டம் வென்ற போது எடுத்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது .

நடிகை திரிஷா கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். தற்பொழுது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.


1999 இல் ‘ஜோடி’ திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் ‘லேசா லேசா’ திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.தொடர்ந்து இவர் நடித்த திரைப்படங்கள் தமிழில் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து திரிஷா ஒரு முன்னணி நடிகையானார்.

கடந்த சில வருடங்களாக அவரை திரையில் காண முடியவில்லை. தற்பொழுது மணிரத்தினம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ‘குந்தவை’ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு பின் மீண்டும் சினிமா உலகில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாடலிங் துறையில் அதிகம் விருப்பம் கொண்ட த்ரிஷா 1999 இல் நடிக்க வருவதற்கு முன்னர் பட்டத்தை வென்றுள்ளார்.

தற்பொழுது நடிகை திரிஷா ‘மிஸ் சென்னை பட்டம்’ வென்ற போது எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….