அடேங்கப்பா ., இவங்க தான் நடிகர் காளிதாஸ் ஜெயராமோட வருங்கால மனைவியா .? என்னது அவங்க ஒரு மிஸ் தமிழ்நாடா !!

தமிழ் மற்றும் மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் ‘மீன் குழம்பு மண் பானையும்’ படம் மூலம் அறிமுகமானார். இவர் பின்னர் ஒரு பக்க கதை படத்திலும் ஹீரோவாக நடித்தார். இது தவிர புத்தம் புது காலை, பாவக்கதைகள் போன்றது படங்களிளும் நடித்து பிரபலமானார்.

இவர் நடிப்பில் தற்சமயம் வெளியான ‘நட்சத்திரம்நகர்கிறது’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஓணம் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் காளிதாஸ் அருகில் அமர்ந்திருக்கும் பெண் யார் என்ற கேள்வி அனைவரது உள்ளத்திலும் எழுந்தது.

தற்பொழுது அவரைப் பற்றிய விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அவர் பெயர் தாரணி காளிங்கராயன். அவர் ஒரு மாடல் என்பதும், 2019 மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற அழகி என்பதும் தெரியவந்துள்ளது. புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ‘இவர் காளிதாசனின் காதலியாக இருப்பாரோ?’ என்று கூறி வருகின்றனர். இது பற்றி காளிதாஸ் ஜெயராம் என்ன சொல்லப் போகிறார்?பொறுத்திருந்து பார்க்கலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*