அடேங்கப்பா… இவ்ளோ காஸா… நயன்தாரா – சமந்தா-வின் ஒரு நாள் மேக்கப் செலவை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க…

தமிழகத்தில் முன்னணி நடிகைகளாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் சமந்தா மற்றும் நயன்தாரா. அண்மையில் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என்ற பெருமையை சமந்தா பெற்றார். தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதனைப் போலவே என்றும் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக நிலைத்து கொண்டிருப்பவர் தான் நயன்தாரா.

இவர் தற்போது ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்து வருகிறார். சமந்தா மற்றும் நயன்தாரா இருவருக்கும் தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். இருவரும் தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்கள்.முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் அதேசமயம் முக்கிய பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகும் திரைப்படங்களிலும் அதிக அளவு கமிட் ஆகியுள்ளனர்.

அதன்படி இவர்கள் இருவரும் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இருவரும் அடுத்து எப்போது ஒன்றாக இணைவார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் முன்னணி நடிகைகளான இவர்கள் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இவர்கள் இருவரின் மேக்கப் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல்தான் அது.அதன்படி நயன்தாராவின் மேக்கப் உதவியாளருக்கு ஒரு நாளைக்கு 55 ஆயிரம் ரூபாய் சம்பளமும் சமந்தாவின் மேக்கப் உதவியாளருக்கு நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் சம்பளமும் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேக்கப் போடுவதற்கு மட்டுமே இவ்வளவு செலவா என்று ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்துடன் கமாண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*