அட இவங்கதான் நீயா நானா கோபிநாத்தின் மனைவியா?… வைரலாகும் திருமண புகைப்படம் உள்ளே…..

பிரபல தொகுப்பாளராக நமக்கு அறிமுகமான ‘நீயா நானா’ கோபிநாத்தின் திருமண புகைப்படங்கள் மற்றும் அவரது மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில் தற்பொழுது வெளியாகி உள்ளது.

‘நீயா நானா’ கோபிநாத் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. இந்த ஒரே ஒரு நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் கோபிநாத். இவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பதையும் கடந்து நடிகராக நிமிர்ந்து நில், திருநாள் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பிரபலமானவர்.

தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் தனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் பொருந்தும் என தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருடைய சரளமான தமிழ் பேச்சும், தெளிவான உச்சரிப்பும், கனத்த குரலில் பேசுவதும் தான் இவரது தனித்துவம் என்றே கூறலாம்.

இவர் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். பின்னர் ஜெயா டிவி ,என் டி டி வி போன்ற தொலைக்காட்சிகளில் பணியாற்றிய, இவர் தற்பொழுது விஜய் தொலைக்காட்சி ‘நீயா நானா’வில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.


யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் இவர் தினமும் ‘நல்லதா நாலு விஷயம்’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ வெளியிடுகிறார். அதை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர்.

நீயா நானா கோபிநாத் அவர்களுக்கு கடந்த 2010ல் துர்கா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வெண்பா என்ற மகள் இருக்கிறார். தற்பொழுது இவர்களது புகைப்படம் இணையதளத்தில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*