
விஜய் டிவியில் சீரியல்கள் ஒருபுறம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி கொண்டிருந்தாலும் ரியாலிட்டி ஷோக்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. அவ்வகையில் விஜய் டிவியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கும் டாப் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. இது தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது என்றால் அது மிகப் பெரிய சாதனை என்றே கூறலாம்.
அதற்கு முக்கிய காரணம் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கும் கோபிநாத் தான். அவரின் கிடுக்குப்பிடியான கேள்வியும் அவரின் விவாதமும் ரசிக்கும் படியாக இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. வாரம் வாரம் தவறாமல் இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் ஏராளமானோர். ஆசிரியர் பட்டப்படிப்பை முடித்துள்ள கோபிநாத் பட்டிமன்ற பேச்சாளராக பல மேடைகளில் இதுவரை பேசியுள்ளார்.
அண்மையில் இன்ஸ்ட்டா பக்கத்தில் நல்லதா நாலு நல்ல விஷயம் என்பதில் நிறைய விஷயங்களை அவர் ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி பிரபலமான பின்னர் தற்போது பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் இவர் நடித்து வருகிறார். இப்படி பல்வேறு புகழுக்குரிய இவரின் மகள் மற்றும் மனைவியை அடிக்கடி இணையத்தில் பலரும் பார்த்திருப்போம்.
ஆனால் அவரின் அண்ணன் யார் என்பது குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. கோபிநாத் அண்ணன் பிரபாகரன் சந்திரன் வேறு யாருமில்லை அவரும் ஒரு நடிகர் தான். அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் மற்றும் பாரதிதாசன் காலனி போன்ற தொடர்களில் நடித்து வருபவர் தான் கோபிநாத்தின் அண்ணன்.தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Leave a Reply