
சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வசூலை அள்ளுமோ அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் சாதனை படைத்துள்ளன. மிமிக்ரி செய்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது.
இதனைத் தொடர்ந்து பிரின்ஸ் மட்டும் அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது தந்தை ஒரு போலீஸ் அவரது அன்ஸீன் புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது ..
Leave a Reply