
தமிழ் சினிமாவில் 1980களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரேவதி. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் விஜயகாந்த், கார்த்தி, பிரபு போன்றோருடன் சேர்ந்து நடித்து பிரபலமானார். தனது சிறப்பான நடிப்பின் மூலம் ஐந்து முறை பிலிம் பார் விருதை பெற்றுள்ளார்.
இவர் பிரபல ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் என்பவரை 1988 காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 27 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2002ல் விவாகரத்து பெற்றனர். இதை அடுத்து நடிகை ரேவதி ஒரு பேட்டியில் தனக்கு குழந்தை உள்ளதாக குறிப்பிட்டார்.
அப்பொழுது ‘இது அவருடைய குழந்தையா? அல்லது தத்து குழந்தையா?’ என்று பலர் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அவரதற்கு பதிலையும் ஒரு மேடையில் குறிப்பிட்டுள்ளார். அதாவது ‘ஒரு பெண் தாய்மை அடையும் போது தான் முழுமை அடைகிறாள். எனவே நான் அதற்காக ஏங்கினேன். எனவே நான் டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.
அவருடைய குழந்தையின் பெயர் மஹி. இந்த நிலையில் நடிகை ரேவதியின் கணவர் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. தற்பொழுது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.