
தென்னிந்திய தமிழ் சினிமாவில் “காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். மேலும், தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,
, மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உ ருவாக்கப்பட்ட “கனா” படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக எங்க வீட்டு பிள்ளை படத்தில் நடித்து அசத்தினார். க/ பெ ரணசிங்கம் படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிகாட்டினார்.
இவர் போலீஸ் அதிகாரியாக நடித்து OTTயில் வெளியான ‘திட்டம் இரண்டு’ திரைப்படம் மற்றும் சமீபத்தில் விஜய் டிவியில் நேரடியாக வெளியான பூமிகா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ததற்போது இவர் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக ..
Leave a Reply