‘ஒரே வயிறா முட்டுது கொஞ்சம் தள்ளி நில்லுங்க’ தனக்கே உரிய பாணியில் நக்கல்….‘அரசியலுக்கு இனி வரப் போவதில்லை’ நடிகர் வடிவேலு பேட்டி…. நடந்ததை நீங்களே பாருங்க…

தமிழ் திரைப்படத்துறையில் ‘வைகைப்புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள் தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர். ஃப்ரெண்ட்ஸ், வின்னர், சச்சின், சந்திரமுகி, மருதமலை, கிரி போன்ற எண்ணற்ற படங்கள் இவர் நடிப்பில் வெளியாகின.தனக்கென்று தனி பாணியை நகைச்சுவையில் ஏற்படுத்திக் கொண்டவர். 1991 இல்’ என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தில் முதன் முதலாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார்.

இப்படத்தில் அவர் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது.தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த வந்த இவர் தற்பொழுது நாய் சேகர் ரிட்டன்ஸ், சந்திரமுகி 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.கோவிலில் சாமி தரிசனத்திற்கு சென்ற இவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.நிருபர் ஒருவர் நீங்கள் அரசியலுக்கு மீண்டும் வருவீர்களா? என்று கேட்டதற்கு, அரசியலுக்கு இனி நான் வரப்போவதில்லை’ என்று அவர் பதில் அளித்துள்ளார்.

 

திரைத் துறையில் இருந்து கொண்டு சமூக பணி ஆற்ற போவதாகவும், நடிகர் போண்டாமணிக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் சுற்றி இருந்த நபர்களை பார்த்து ஒரே வயிறா முட்டுது கொஞ்சம் தள்ளி நில்லுங்க என்று தனக்கே உரிய நக்கலான பாணியில் கூறியுள்ளார். தற்பொழுது இந்த பேட்டி இணையத்தில் வெளியாகியுள்ளது…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*