
கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “சூரரைபோற்று”. இந்த படத்தை இயக்குனர் சுதா கோங்குரா இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா “மாறா” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரிலீசான போது மக்களிடத்தில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. நல்ல வரவேற்பும் பெற்றது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இந்த திரைப்படத்திற்கு ( “சூரரைபோற்று”) ஐந்து தேசிய விருதுகள் வழங்க பட்டுள்ளது. திரைக்கதை, நடிகர், நடிகை, இசையமைப்பாளர் என்று ஐந்து தேசிய விருதுகள் வழங்கப்பட்டுளளது. இதனால் ரசிகர்கள் மற்றும் விருதுகளை பெற்றவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இதற்க்கு, படங்களை review செய்யும் ப்ளூ சட்டை மாறன் தற்போது ஒரு விஷியத்தை கூறியுள்ளார்.
அதாவது, தேசிய திரைப்பட விருதுக் குழுவில் சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை என்பவர் இடம்பெற்றுள்ளதாகவும், அவரால் தான் சூர்யாவுக்கு இந்த விருது கிடைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லால், மிஸ்டர் சூர்யா உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார், ப்ளூ சட்டை மாறன்.