ஆளே அடையாளமே தெரியாமல் மாறிப் போன நடிகை சங்கவி… வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்…..

நடிகை சங்கவி தனது 16 வது வயதில் அஜித்தின் ‘அமராவதி’ படத்தில் நடித்து பிரபலமானார். இப்படத்தின் மூலமாகவே அவர் தமிழில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தன்னுடைய நடிப்பின் திறமை கொண்டு எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார் .விஜய் ,அஜித், ரஜினி விஜயகாந்த் ,கமல், பிரபு, சத்யராஜ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் நடிகை சங்கவி.

வெள்ளித் துறையில் நடித்துக் கொண்டிருந்த சங்கவி பட வாய்ப்புகள் குறைந்த உடன் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார். கோகுலத்தில் சீதை ,சாவித்திரி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ஐடி கம்பெனி ஓனர் வெங்கடேசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதியினருக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்கு பின்னர் சில நடிகைகள் நடிப்பிற்கு குட் பாய் சொல்லிவிட்டு, தனது குடும்பத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதேபோல சங்கவியும் திருமணமானவுடன் திரைத்துறையை விட்டு சற்று விலகி இருந்தார். தற்பொழுது நடிகை சங்கவி தனது இரண்டு வயது பெண் குழந்தை, கணவர் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.அவற்றில் சில உங்கள் பார்வைக்காக…..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*