“இது வேற மாதிரி இருக்கே”…. சேலையில் இருக்கும் நடிகை மடோனா செபாஸ்டின்… வாயடைத்துப்போன ரசிகர்கள்…

கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகிய “பிரேமம்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மடோனா செபஸ்டியன், இந்த படத்தின் மூலமாக மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார் இளம் நடிகையான மடோனா செபாஸ்டின் அவர்கள். தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய “காதலும் கடந்து போகும்’ என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்,

பிறகு மீண்டும் 2017 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் “கவண் ” திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்பு தனுஷ் இயக்கத்தில் வெளியாகிய “பவர்பாண்டி” படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார், கடைசியாக “வானம் கொட்டட்டும்” என்ற படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் சசிகுமாருடன் சேர்ந்து “கொம்பு வச்ச சிங்கம்டா” என்ற படத்தில் நடித்துள்ளார்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் இவர். தற்போது வெள்ளை நிற சேலையில் இருக்கும் இவரின் புகைப்படங்கள் சில இணையதளத்தில் உலா வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். இந்த புகைப்படங்கள் இவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது….

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*