
சின்னத்திரையில் சூப்பர் ஜோடியாக கலக்கிய பலரும் தற்போது நிஜ வாழ்க்கையில் கணவன் மனைவியாக ஒன்று சேர்ந்துள்ளனர். அவ்வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து ஜோடி சேர்ந்தவர்கள் தான் செந்தில் மற்றும் ஸ்ரீ ஜா.
கேரளாவில் பிறந்த ஸ்ரீ ஜா கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் சீரியலில் நடிக்க தொடங்கினார். இவர் இதுவரை 40க்கும் மேற்பட்ட சீரியல்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்துள்ளார். அதில் குறிப்பாக இவருக்கு நல்ல பெயரை தேடி தந்தது சரவணன் மீனாட்சி சீரியல் தான். இதில் ஜோடியாக நடித்த செந்தில் மற்றும் ஸ்ரீ ஜா இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர வேண்டும் என ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர்.
முதலில் தாங்கள் நண்பர்கள் என்று கூறி வந்த இவர்கள் ஒரு கட்டத்தில் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டனர். இதனிடையே திருமணத்திற்கு பிறகு ஸ்ரீ ஜா தமிழில் கணவருடன் இணைந்து வெப் சீரிஸ் நடித்தார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
நீண்ட நாட்களாக இவர்களின் புகைப்படங்கள் எதுவும் இணையத்தில் வெளியாகாத நிலையில் தற்போது ஓணம் பண்டிகை ஸ்பெஷல் ஆக செந்தில் தனது மனைவி ஸ்ரீ ஜா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Leave a Reply