இப்படி ஒரு மரணமா..? நடிக்கும்போது மேடையிலேயே உயிரிழந்த தெருக்கூத்து கலைஞர்.. கலங்க வைக்கும் வீடியோ..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஊக்கரம் ஊராட்சி குப்பந்துறையில் 25க்கும் மேற்பட்ட தெருக்கூத்து கலைஞர்கள் இருக்கின்றன. அவர்களின் நாடகக் கலைஞர் ராஜய்யன் தெருக்கூத்து கலைஞர்களை ஒருங்கிணைத்து நடத்துபவர். இவர் நாரத நரசிம்மன் வேடத்தில் நடிக்கும் தனிச்சிறப்பு பெற்றவர்.

இந்நிலையில் கலந்த ஞாயிற்றுக்கிழமை முதல் விடிய விடிய தெருக்கூத்து நடந்தது. இதில் 25 நாடக கலைஞர்கள் நடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ராஜய்யன் வேகமாக ஆடிக் கொண்டிருக்கும்போது திடீரென ஆட்டத்தை நிறுத்து மேடையில் சரிந்தார்.

இந்த சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்.