இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம் …. நடிகை நயன்தாரா கர்ப்பமா…. நம்புறது கொஞ்சம் கஷ்டம் தான்…….வைரல் புகைப்படம் உள்ளே….

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா குழந்தைகளுடன் விளையாடுவதைப் போல தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தோடு தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பாராத உச்சத்தில் அமர்ந்துள்ளவர் நடிகை நயன்தாரா. 2005 ஆம் ஆண்டு ‘ஐயா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா.அதை தொடர்ந்து சந்திரமுகி, சிவகாசி, கஜினி, கள்வனின் காதலி, வல்லவன், தலைமகன், ஈ, சிவாஜி, பில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவும் கடந்து 2015 நானும் ரவுடிதான் படத்தில் இணைந்து பணியாற்றி வந்தனர். இந்த படத்தில் இருந்து இருவரும் நட்பாக பழகி பின்னர் காதலித்து வந்தனர். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன் நயன்தாரா கடந்த ஜூன் 9 தேதி மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன்களுக்கு சென்று அங்கு பல புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர். தற்பொழுது கூட இயக்குனர் விக்னேஷ் சிவன் பிறந்த நாள் துபாயில் படு ரொமான்டிக்காக கொண்டாடினர்.

இந்த சமயத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் மூன்று குழந்தைகளுடன் உள்ளனர். இதில் அவர், ”குழந்தைகளுக்கான நேரம், எதிர்காலத்திற்கான பயிற்சி” என்று அந்த புகைப்படத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் ‘நயன்தாரா ஒருவேளை கர்ப்பமாக இருக்கிறாரோ? அதைத்தான் விக்னேஷ் சிவன் இவ்வாறு கூறுகிறாரா?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்பொழுது இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்கின்றனர். இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*