“இரண்டு எழுத்து பெயர் சூட்டியாச்சு”…. மீண்டும் தாத்தா ஆன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…. மகிழிச்சியில் குடும்பத்தினர்…

இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் இன்று இரண்டு மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாட்டால் இருவரும் தற்சமயம் விவாகரத்து பெற்றனர்.

இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இவரும் முதல் திருமணமாகி விவாகரத்தானவர் தான். இரண்டாவது திருமணமாக தொழிலதிபர் விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தில் அரசியல் பிரமுகர்களும் ,சினிமா திரை பிரபலங்களும் கலந்து கொள்ள சென்னை கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் கோலாகலமாக நடந்தது.

சௌந்தர்யா விசாகன் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தற்பொழுது கர்ப்பமாக இருந்தார். நேற்று இரவு அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ‘வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி’ என்று பெயர் சூட்டியுள்ளனர். சௌந்தர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே வேத் என்ற மகன் உள்ளார். தற்பொழுது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தையின் கையை பிடித்தவாறு

புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வெளியிட்டுள்ளார். அப்பதிவில் அவர் கூறியுள்ளதாவது ‘கடவுளின் ஆசிர்வாதத்துடனும், பெற்றோர்கள் ஆசிர்வாதத்துடன் எனது கணவர் விஷாகன், எனது முதல் குழந்தை வேத் மற்றும் நான் இன்று வேத் தம்பி வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்பதில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம்’. என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*