“என்னடா இப்டி நசுக்குறிங்க”… கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்கு உள்ளன விஜய் பட நடிகை… வைரல் வீடியோ…

முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா கூட்ட நெரிசலில் சிக்கி சங்கடத்திற்கு உள்ளான வீடியோ ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர்.தற்பொழுது அவர் விஜயுடன் இணைந்து ‘ வாரிசு’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

பாலிவுட்டிலும் முன்னணி நடிகர்களுடன் பிஸியாக நடித்துக் கொண்டுள்ளார் . இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார் ராஷ்மிகா மந்தனா.

தற்சமயம் அவர் மும்பையில் உள்ள விநாயகர் கோவில் ஒன்றுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார் .அங்கு கூட்டத்திலிருந்து ரசிகர்கள் சிலர் செல்பி எடுக்க முயன்றனர். சிலர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரிடம் தகாத முறையில்,அவருடைய உடல் அங்கங்களை தொடும்படி நடந்து கொண்டுள்ளனர்.

கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த காரணத்தினால் பாதுகாவலர்களாக கட்டுப்படுத்த முடியவில்லை. சாமி கும்பிட வந்த ராஷ்மிகா மந்தனா உடனடியாக பாதுகாவலர்களின் உதவியுடன் காரில் ஏறி சென்றுவிட்டார். ரசிகர்கள் இவ்வாறு எல்லை மீறி நடந்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*