“என்னை மன்னித்து விடுங்கள்”…. நான் சொல்ல வந்தது வேறு…. “இரவின் நிழல்” நடிகை ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ….!!!!

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமான இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரிகிடா நடித்துள்ளார். ஆஹா கல்யாணம் வெப் சீரியஸ் மூலமாக பவி டீச்சர் கதாபாத்திரத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இரவின் நிழல் திரைப்படத்தில் இவரின் நடிப்பை பலரும் பாராட்டி வந்த நிலையில் சமீபத்தில் அவரின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது அண்மையில் இவர் பத்திரிக்கையாளர்கள் மத்தியில், இந்த கதையே தனி ஒருவன் பற்றியதுதான். அவனது வாழ்க்கையில் கெட்டது மட்டும் தான் நடக்கின்றது. அதை ராகாக தான் சொல்ல முடியும். இப்போது நாம் ஒரு சேரிக்கு போனோம் என்றால் நாம் கெட்ட வார்த்தைகளை மட்டும் தான் கேட்க முடியும். சினிமாவுக்காக ஏமாத்த முடியாது என்று கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் பிரகிடா ட்விட்டரில் இதற்கு மன்னிப்பு கேட்டு உள்ளார். அவருக்காக நடிகர் பார்த்திபனும் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில், “பிரிகிடா சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், மனக்காயம் அடைந்தவர்களிடம். 1989-ல் நடக்கும் கதையிது. 2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம், கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால் என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை ஹீரோ ஆக்குவதே!” என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை பிரகிடா தனது ட்விட்டர் பக்கத்தில், ”நான் கூறிய வார்த்தைகளுக்கு இதயபூர்வமாக மன்னிப்புக்கேட்டுகொள்கிறேன். இடத்தை பொறுத்து மொழி மாறுபடும் என்றுதான் கூற வந்தேன், ஆனால் அது இப்படி தவறாக மாறிவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள்” பதிவிட்டிருந்தார்.

https://twitter.com/Brigidasaga22/status/1549297843147395072

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*