“என்ன அழகு.. எத்தனை அழகு”… மாடர்ன் ட்ரெஸ்ஸில் மின்னும் நடிகை சினேகா… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

90’s கிட்ஸ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவர் தமிழில் வெளியான ‘என்னவளே’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவரது சிரிப்புக்காக மட்டுமே பல ரசிகர்கள் உள்ளனர். இதற்காகவே அவர்களது ரசிகர்கள் அவருக்கு கொடுத்த பட்டம் ‘புன்னகை அரசி’.

‘என்னவளே’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவர் தமிழில் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, ஆட்டோகிராப், குசேலன் சிலம்பாட்டம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.இறுதியாக தனுசுடன் இணைந்து பட்டாசு திரைப்படத்தில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட இவர் சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் நடிக்கும் பொழுது அவருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருந்தார்களோ அதே அளவிற்கு இப்போதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்பொழுது பர்பிள் நிற மாடர்ன் உடை ஒன்றை அடைந்து மிக அழகாக போட்டோ சூட் எடுத்து தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த புகைப்படங்கள் அதிகம் ஷேர் செய்யப்படுகின்றன.

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*