என்ன இது..? ரவீந்திர் – மகாலட்சுமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியா?…. குழப்பத்தில் ரசிகர்கள்…. பயங்கர ட்விஸ்ட் உள்ளே இருக்கு …வைரலாகும் வீடியோ…

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

லிப்ரா ப்ரொடக்ஷன் உரிமையாளரான ரவீந்தர் சீரியல் நடிகை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அறிந்த ஒன்றே. இவர்களது திருமணம் செப்டம்பர் 1ம் தேதி திருப்பதியில் நடைபெற்றது. திருமணம் நடந்த நாள் முதலில் சமூக வலைத்தளங்களில் இவர்களது பெயர் தான் ஹாட் டாபிக். அந்த வகையில் இவர்களும் சலிக்காமல் பேட்டிகளையும், புகைப்படங்களையும் அதிகமாக கொடுத்தனர்.

சீரியல் நடிகை மகாலட்சுமி தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் ‘அரசி’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் கால்பதித்தார். ஒன்றை ஆண்டுகளுக்கு மேல் காதலித்து இருவரும் தற்பொழுது திருமணம் செய்துள்ளனர். பிரபலங்களின் திருமணங்கள் கூட இந்த அளவுக்கு பேசப்பட்டதில்லை. ஆனால் இவர்களின் திருமணம் சமூக வலைத்தளங்களில் படு வைரலானது.

 

இப்பொழுது சமூக வலைத்தளங்களில் இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் ‘இது என்ன ரவீந்தர் மகாலட்சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சியா?’ என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

ஆனால் உண்மை என்னவென்றால் இது பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ‘வந்தாள் மகாலட்சுமி’ என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டுள்ளனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv updates (@vijaytvglitz)