
பிரபல சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் நடிகை ரேகா நாயர். சினிமாவிலும் ஆக்டிவாக உள்ள அவர் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பார்த்திபனின் இரவின் நிழல் படத்திலும் நடித்துள்ள நடிகை ரேகா நாயர், கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாக நடிக்க தயார் என தெரிவித்துள்ளார். இரவின் நிழல் ராணி என்ற கதாப்பாத்திரத்தில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக நடித்திருந்தார். அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இருப்பினும் மேலாடையின்றி அரை நிர்வாணமாக நடித்துள்ளாரே என்ற விமர்சனமும் எழுந்தது. இந்நிலையில் இது குறித்து பேட்டி அளித்த அவர், கலையை கலையாக பார்க்க வேண்டும். ஆபாசமாக பார்த்தால் ஆபாசம் மட்டும் தான் தெரியும், இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்ததற்கு எனக்கு பாராட்டுகளும் கிடைத்தன, வசைகளும் கிடைத்தன என கூறியுள்ளார்.