“என் கண்களை தானமாக வழங்குகிறேன்”…. பிரபல நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்…. குவியும் பாராட்டு….!!!!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்திருப்பவர் தான் ஆர் ஜே பாலாஜி. இவர் நடிப்பில் வெளியான எல் கே ஜி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான வீட்ல விசேஷம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சென்னையில் உள்ள குரோம்பேட்டையில் டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனையில் ஆர் ஜே பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண் தானம் என்ற உன்னத நோக்கத்தை ஆதரித்தார். அதில் பல முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். குரோம்பேட்டை வசதியில் செப்டம்பர் 30-ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு வரை இலவச கண் ஆலோசனை கிடைக்கும் என்று டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை அறிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர் ஜே பாலாஜி பேசுகையில், குரோம்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை புதிய வசதியை திறந்து வைத்து எனது கண்களை தானமாக வழங்குவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கண்கள் உங்களின் உடலில் மிகவும் வளர்ந்த உணர்வு உறுப்புகள். ஆனால் பலரும் தங்கள் வாய்ப்பு இழந்து விடுகிறார்கள்.

பார்வை இல்லாததால் இந்த அழகான உலகத்தை பார்க்க முடியாமல் போகிறது.நாம் இறந்த பிறகும் கண்களை தானம் செய்வதன் மூலம் அவர்களின் பார்வையை நம்மால் மீட்டெடுக்க முடியும். ஒருவரின் வாழ்வில் நல்ல மாற்றத்தை உருவாக்க உதவும் ஒவ்வொருவரின் கண்களையும் உறுதி மொழியாக நான் ஊக்குவிப்பேன். இந்த நன்னாளில் எனது கண்களை நான் தானம் செய்கிறேன் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.அவரின் இந்த செயலுக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*