“ஒரு நாள் நா ஹாலிவுட் படம் நடிப்பேன்”….. சொல்லியதை செய்து காட்டிய நடிகர் நெப்போலியன்…

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தை வெகுவாக கவர்ந்த நடிகர் நெப்போலியன். இவர் அந்த காலகட்டத்தில் நடிப்பில் கொடிகட்டி பறந்தவர். பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

அவ்வகையில் இவர் நடித்த புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தை இயக்குனர் பாரதிராஜா இயக்கியிருந்தார். அந்த திரைப்படத்தில் நெப்போலியன் உடன் இணைந்து ராகுல்,சுகன்யா மற்றும் பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இதனிடையே அப்படத்தில் அறிமுகமான குமரேசனுக்கு இயக்குனர் பாரதிராஜா நெப்போலியன் என்று பெயர் வைத்தார்.

அப்போது நெப்போலியன் தன்னுடைய நண்பர்களிடம் பாரதிராஜா தனக்கு வைத்த பெயரைக் கூறியிருந்தார். அதனைக் கேட்ட அவரது நண்பர்கள் அனைவரும் பயங்கரமாக கேலி செய்து சிரித்தனர். சரக்கு பாட்டில் பெயரை வைத்திருப்பதாக கூறி அவரை கேலி செய்தனர்.

அதனைக் கேட்டு கோபமடைந்த நெப்போலியன்,உங்கள மாதிரி அருள் மற்றும் விஜய் என பெயர் வைத்தால் தமிழ் படத்தில் மட்டும் தான் என்னால் நடிக்க முடியும், என்னால நெப்போலியன் என்று பெயர் வைத்தால் ஒரு நாள் ஹாலிவுட் படம் நடிப்பேன் என்று சொல்லியிருந்தார்.

அவர் அப்போது சொல்லியதை நண்பர்களிடம் நிரூபித்து காட்டியுள்ளார். அதாவது சீவலப்பேரி பாண்டி மற்றும் எட்டுப்பட்டி ராசா படங்களுக்குப் பிறகு இவருக்கு மிகப்பெரிய பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில் அவர் நண்பர்களிடம் சொன்னபடியே ஹாலிவுட் படங்களில் நடித்தார்.

அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கிறிஸ்துமஸ் கூப்பன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் அடுத்தடுத்து டேவில்ஸ் நைட், ட்ராப் சிட்டி, ஒன் மோர் ட்ரீம் என அடுத்தடுத்து ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*