ஒரே இயக்குனர் இயக்கத்தில் 17 படங்கள்…. விஜயகாந்த் குறித்து பலரும் அறியாத…. வியக்க வைக்கும் உண்மை தகவல் இதோ…

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரின் ஆக்சன் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வெற்றி தான். அந்த அளவிற்கு தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் ரசிகர்களால் கேப்டன் என்று அன்பாக அழைக்கப்படுபவர். நடிப்பு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் விஜயகாந்த்.

இந்நிலையில் விஜயகாந்த் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்து பிரபல இயக்குனர் இயக்கத்தில் மட்டும் கிட்டத்தட்ட 17 படங்களில் நடித்து அசத்தியுள்ளார். சினிமாவில் இயக்குனர் இயக்கத்தில் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு படங்கள் நடித்தாலே அது மிகப்பெரிய விஷயம் தான். ஆனால் விஜயகாந்த் ஒரே இயக்குனர் இயக்கத்தில் 17 படங்களை நடித்துள்ளார்.

இவரின் நடிப்பில் வெளியான சில படங்கள் வெற்றி பெறாமல் போனாலும் 70% படங்கள் மக்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். அவ்வாறு விஜயகாந்தின் மனதில் நீங்காத இடம் பிடித்த அந்த இயக்குனர் விஜயின் தந்தை எஸ் ஜே சந்திரசேகர் தான், இவர் ஒரே ஆண்டில் மொத்தம் 17 படங்களை அவர் இயக்கத்தில் நடித்தார். இதை தொடர்ந்து சில வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தார்.

எஸ் ஏ சந்திரசேகர் விஜயகாந்த ஹீரோவாக மட்டுமல்லாமல் அவருக்கு இருந்த அனைத்து திறமைகளையும் வெளிக்கொணரும் விதமாக, ஒவ்வொரு படத்திலும் அவரின் ஒவ்வொரு திறமையும் வெடி கொண்டு வந்துள்ளார். விஜயகாந்தின் திரை உலக பயணத்தில் எஸ் கே சந்திரசேகருக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்று கூறலாம்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*