”கண் பாஷை பேசினால் நான் என்ன செய்வேன்.. கன்பியூசன் ஆகிறேன் உள்ளுக்குள்ளே”… நடிகை பாவனாவின் கலக்கல் புகைப்படங்கள் உள்ளே…..

நடிகை பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண் பாஷையில் பேசும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.

தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பாவனா. அதை தொடர்ந்து வெயில், தீபாவளி போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை பாவனா மலையாளத்தைச் சேர்ந்த முன்னணி நடிகர் ஒருவரின் அத்துமீறலுக்கு உள்ளாகி மனமடைந்து சினிமாவை விட்டு சில காலம் விலகி இருந்தார்.

இவர் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவுகன்னியாக வலம் வந்தார். இவர் நடிப்பையும் தாண்டி இவரின் சிரிப்பிற்கு மயங்காதவர்களே இல்லை. இவர் 2018ல் கன்னட திரைப்பட தயாரிப்பாளரான ‘நவீன்’ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை தனது instagram பக்கத்தில் வெளியிடுவார்.

அதுபோல தற்பொழுது கருப்பு நிற உடை அணிந்து கண் பாஷை பேசும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ‘கண் பாஷை பேசினால் நான் என்ன செய்வேன்? கன்பியூசன் ஆகிறேன் உள்ளுக்குள்ளே’.. என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*