கைகளால் குழந்தையை பிடித்தபடி மனைவியுடன் மாஸாக போஸ் கொடுத்த விஜயகாந்த் , RARE புகைப்படம் உள்ளே ..

தென்னிந்திய தமிழ்த்திரையுலகில் துணிச்சல் மிக்க நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்த இவர் அப்போது பல நல்லப்பணிகளை முன்னெடுத்தார். அதுமட்டும் இல்லாமல் கேப்டன் என தன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

ஜெயலலிதா,கருணாநிதி ஆகியோரின் காலத்திலேயே விஜயகாந்த் தேமுதிகவை துவங்கி அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தார். நடிகராக இருந்தாலும் ஏழைத் தொண்டர்களை எப்போதும் தனிக்கவனம் செலுத்தி கவனிப்பார். கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தேமுதிக முதன் முதலாக உதயமாகி தனித்துப் போட்டியிட்டது.

ஆனால் அந்தத் தேர்தலிலேயே 8 சதவிகித வாக்குகளைப் பெற்று தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தேமுதிக உருவெடுத்தது , தற்போது இவரது சிறிய வயதில் கையில் மகனோடு மனைவி பிரேமலதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*