கை, கால், முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய வெண்ணிலா கபடி குழு நடிகர்…. மனைவியுடன் கண்ணீர் மல்க அளித்த பேட்டி..

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்த நடிகர் ஹரி வைரவன் தற்பொழுது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கை, கால், முகம் வீங்கி நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் காமெடி காட்சிகளில் நடித்தவர் நடிகர் ஹரி வைரவன். ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் பரோட்டா காமெடியில் வைரவன் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘வெண்ணிலா கபடி குழு’.

இப்படத்தில் ’50 புரோட்டாக்களை சாப்பிட்டால் சாப்பிட்டவர் காசு கொடுக்க வேண்டாம். ஹோட்டல் நிர்வாகமே காசு கொடுத்து விடும்’என்று ஒரு காமெடி சீன் வரும் அந்த காட்சியில் நடிகர் சூரியுடன் இணைந்து நடிகர் வைரவன் அக்காட்சியில் இடம் பெற்றிருப்பார். அப்பொழுது ‘இவனை தவிர’ யார் வேண்டுமானாலும் போட்டியில் பங்கு கொள்ளலாம் என்று ஹோட்டலில் உள்ள ஒருவர் கூறுவார்.

அந்த இவனைத் தவிர வேறு யாருமில்லை நடிகர் ஹரி பைரவன் தான். தற்பொழுது அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வருகிறார். தற்பொழுது அவரும் அவரது மனைவியும் இணைந்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்கள்.

அதில் அவர் கூறியதாவது, ‘வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம் போன்ற திரைப்படங்களில் என் கணவர் ஹரி நடித்துள்ளார். எங்களுக்கு வீட்டில் பார்த்து தான் திருமணம் செய்து வைத்தார்கள். எங்கள் வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று அவருக்கு பேச்சு மூச்சு இல்லாமல் போய்விட்டது. மருத்துவமனை அழைத்து சென்றேன். ஆறு மாதம் தான் உயிரோடு இருப்பார் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக எப்படியோ சமாளித்து அவரை குணமாக்கி விட்டேன்.என்னை கருணை கொலை செய்து விடு என்று என் கணவர் என்னிடம் அடிக்கடி கூறுவார். இப்பொழுது கொஞ்சம் நடக்கவும் பேசவும் செய்கிறார். எனக்கு நடிகர் பாண்டி, கார்த்திக், சூரி, சரவணா அண்ணா போன்றோர் உதவி செய்தனர். நான் பெட்டிக்கடை வைத்து என் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன். இன்னும் ஆறு மாதத்தில் என் கணவர் குணமாகி விடுவார் என்று மிகவும் தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார்.அவரின் தன்னம்பிக்கை பேட்டி இதோ ….

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*