
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஹிட் சீரியலில் ஒன்று ‘மௌன ராகம்’. இதன் முதல் பகுதி 2017 வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது. தற்போது இரண்டாம் பகுதி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. முதல் சீசன் சக்தி என்ற சிறு குழந்தையை மையமாக வைத்து எடுக்க்கப்பட்டது . இரண்டாவது சீசனில் கதையை மாற்றி காதல் கலைக்களத்துடன் நகர்ந்து கொண்டு வருகிறது.
இதன் இரண்டாவது சீசனை தருண் , வருண் என்று இரண்டு ஹீரோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் தருண் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் நடிகர் ராகுல் ராமசந்திரன். நடிகர் ராகுல் தமிழ் சீரியலில் மட்டுமின்றி மலையாள சீரியல்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் மலையாள சீரியலில் தன்னுடன் நடிக்கும் “அஸ்வதி” என்ற சீரியல் நடிகை காதலிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
தற்பொழுது அவர்கள் இருவருக்கும் நேற்று எங்கேஜ்மென்ட் நடந்துள்ளது.
இந்த நிலையில் இவர்களது எங்கேஜ்மென்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்படுகின்றன.
நடிகர் ராகுலுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த புகைப்படங்களை எல்லாம் சண்டிகர் ராகுல் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
Leave a Reply