
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிம்பு. இவரின் நடிப்பில் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து பத்து தல படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதனிடையே சிலம்பரசனை பார்க்கும் ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கும் கேள்வி திருமணம் எப்போது என்பதுதான்.
அண்மையில் அவருக்கு திருமணம் செய்ய குடும்பத்தார் முடிவு செய்திருப்பதாகவும் அதற்காக பெண்பார்த்து வருவதாகவும் இணையத்தில் தகவல் வெளியானது. இருந்தாலும் சிம்புவின் திருமணம் எப்போது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள விந்து தனித்தது காடு திரைப்படத்தின் கதாநாயகியான சித்தி இட்னானி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் மூன்று Rose-களை கொடுத்து அதில் ஒன்றை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புபவருக்கு தரவேண்டும் என கூறப்பட்டது. அப்போது, சிம்புதான் தமிழின் மோஸ்ட் Eligible பேச்சுலர், அவருக்கு தான் இந்த ரோசை கொடுக்கிறேன் என்று அவர் கூறியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Leave a Reply