‘சுந்தரபாண்டியன்’ பட நடிகையா இவர்..? இவருக்கு திருமணம் ஆயிடுச்சா… இவ்ளோ பெரிய குழந்தை இருக்கா..? வைரலாகும் குடும்ப புகைப்படம்….

ரம்மி, சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஜானகி தேவி. இவர் தன் கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்பொழுது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

சுந்தரபாண்டியன், ஆடுகளம், முத்துக்கு முத்தாக,, ரம்மி காவலன் போன்ற படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜானகி தேவி. தமிழ் சினிமாவில் முதலில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் பிரபலமானவர்கள் ஏராளம்.

இவர் தற்பொழுது வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் கயல், திருமகள் போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த வருகிறார். இந்த தொடர்களின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மீண்டும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். பெரும்பாலும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

நடிகை ஜானகி தேவி ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் என்பவரை 2015 திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தற்பொழுது இவர்களது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*