
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகப் பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். இந்த நிகழ்ச்சி பல பாடகர்களை திரைத்துறைக்கு தந்துள்ளது. துருதுருவென இருக்கும் இளம் பெண்ணான பிரகதி சிங்கப்பூர் தமிழ் பெண்.இசையின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சிறுவயதிலிருந்து பாட்டு பாட கற்றுக் கொண்டு டிவி நிகழ்ச்சிகளிள் கலந்து கொண்டுள்ளார். சூப்பர் சிங்கர் ஜூனியரில் 2012 ஆம் ஆண்டு பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழைக் கொண்டு சினிமாவிலும் பாடத் தொடங்கினார்.
எண்ணற்ற பாடல்களை பாடிக்கொண்டு வருகிறார். இவர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் தன் சொந்த நாட்டிற்கு திரும்பிய இவர் ,அங்கிருந்து பல ஆல்பம் பாடல்களைப் பாடி இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இவருடைய பாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் அதிக அளவு ரசிகர்களை கொண்டுள்ளார். தற்பொழுது இவர் வெளியிட்டு இருக்கும் கிளாமரான புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘சூப்பர் சிங்கரில் பாடிய பிரகதியா இது?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…..
View this post on Instagram
Leave a Reply