“ஜவான் திரைப்படம்”…. விஜய் சேதுபதி மட்டும் இத்தனை கோடியா?…. கேட்டா தலையே சுத்துது….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோவாக வளம் வந்தாலும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பார். சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சாந்தமாகவும், மற்றொரு பக்கம் விக்ரம் படத்தில் மிரட்டும் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

அது மட்டுமல்லாமல் பேட்ட, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் அனைவரிடமும் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் செம்ம பிசியான நடிகராக விஜய் சேதுபதி வலம் வருகிறார்.

இவர் நடிப்பில் இறுதியாக வெளியான மாமனிதன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இவர் ஹீரோவாக நடித்த படங்களை விட வில்லனாக நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகின்றன. அதனால் ஹீரோவை விட வில்லனாக நடிப்பதற்கு விஜய் சேதுபதி அதிக சம்பளம் வாங்கி வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவ்வகையில் ஷாருக்கான்,தீபிகா படுகோனே மற்றும் நயன்தாரா உள்ளிட்ட பலரது நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு 21 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதற்கு அதிகபட்சமாக 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த நிலையில் தற்போது வில்லனாக நடிப்பதற்கு 20 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக வெளியாகி உள்ள தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*