ஜவான் படப்பிடிப்பில் நடிகர் ஷாருக்கானுடன் விஜய்…. அதுவும் எதற்காக தெரியுமா?…. சூப்பர் அப்டேட்……!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு வெற்றி பெறாத நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா வந்தனா நடிக்கிறார். விஜய்க்கு அப்பாவாக சரத்குமார் மற்றும் இவர்களுடன் இணைந்து யோகி பாபு மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் அனைவரும் படத்தில் நடித்து வருகிறார்கள்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது. இதனிடையே இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படங்கள்தான் தெறி, மெர்சல், திரைப்படங்கள். இந்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் அட்லீ தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்தை பெற்றார்.

தற்போது அட்லி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து படம் இயக்கி வருகின்றார். இப்படத்தில் நயன்தாரா மற்றும் பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இந்தப் படம் ஆக்சன் கதைக்களத்தை கொண்டுள்ளது. இப்படத்திற்கு ஜவான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இப்படி விஜய் நடிக்கும் வாரிசு படம் ஒரு பக்கமும் ஷாருக்கான் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜவான் என இரண்டு திரைப்படத்தின் இயக்குனர்களும் படப்பிடிப்பில் மும்முறமாக ஈடுபட்டு வரும் நிலையில் இளைய தளபதி விஜய் சமீபத்தில் அட்லீ இயக்கம் ஜவான் படத்தில் ஒரு கேமியோ ரோல் கொடுப்பதாக செய்திகள் வெளியானது.

மேலும் நடிகர் ஷாருகான் மற்றும் இளைய தளபதி விஜய் இருவரும் சந்தித்துக் கொண்டது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது. இருந்தாலும் புகைப்படத்தை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அதிகாரப்பூர்வ அறிக்கை வரும் வரை காத்திருங்கள் என நெட்டிசன்கள் அறிவுறுத்தி வருகின்றனர். எனவே ஜவான் திரைப்படத்தில் விஜய் நடிக்கிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*