
பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமி அனில் என்பவரை காதலித்து முதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. சன் மியூசிக் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், சன் டிவியில் ஒளிபரப்பான ‘அரசி’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் கால்பதித்தார் .
யாமிருக்க பயமேன், செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘தேவதையை கண்டேன்’ சீரியல் மூலம் இவர் பிரபலமானார் .இந்த தொடரின் ஹீரோவாக நடித்த ஈஸ்வர் என்பவரை காதலித்ததாக கூறப்பட்டது.
இதைக்கேட்ட ஈஸ்வர் மனைவி போலீசில் புகார் அளித்தார். இது நடந்த சில ஆண்டுகளே ஆகிவிட்டது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்பொழுது நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவிந்தர் என்பவரை இரண்டாவதாக திருமணம் முடித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் மகாலட்சுமியுடன் மனக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை ரவீந்தர் வெளியிட, அது வைரலானது.
இந்த சமயத்தில் சீரியல் நடிகை மஹாலட்சுமி, முதல் கணவர் அனில் மற்றும் இவர்களுடைய குழந்தை உடன் இருக்கும் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வெளியாகிய தீயாய் பரவி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்….
Leave a Reply