திடீரென பெயரை மாற்றிய மாதவன் பட நடிகை …. காரணம் என்ன தெரியுமா..? வைரலாகும் டுவிட்டர் பதிவு இதோ..

கன்னட திரை உலகில் யூ டர்ன் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். அதன் பிறகு அஜித் நடிப்பில் தமிழில் வெளியான நேர்கொண்ட பார்வை, காற்று வெளியிடை மற்றும் விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சக்ரா. இதனைத் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமூக வலைத்தளத்தில் தனது பெயரை மாற்றி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில், “தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னுடைய பெயரை ஸ்ரத்தா ரமா ஸ்ரீநாத் என்று மாற்றிக் கொண்டேன். அதனை நான் இங்கேயும் மாற்ற வேண்டும் . மேலும், இதில் ரமா என்பது என் அம்மாவின் பெயர்” கூறி அவர் twitter பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*