திடீரென மர்மமான முறையில்….. உயிரிழந்த நடிகை சோனாலி…. இவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா….?

அரியானா மாநிலத்தை சேர்ந்த நடிகையும் பாரதிய ஜனதா மகளிர் அணி நிர்வாகியுமான சோனாலி போகத் (42) கோவாவில் கடந்த 22 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில்,அவரது உதவியாளர்கள் இரண்டு பேர் உள்ளிட்டு ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

சோனாலி அதிகளவு போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவரின் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சோனாலியின் சொத்துக்களை அபகரிக்க இந்த கொலை நடந்துள்ளதாக அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டு இருந்தனர்.

இந்நிலையில் மர்மமாக உயிரிழந்த சோனாளியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இவருக்கு 110 கோடி சொத்து உள்ளது.மேலும் 96 கோடி ரூபாய் மதிப்பில் பண்ணை வீட்டுடன் பல ஏக்கர் நிலம் உள்ளதாகவும் 3 கோடி மதிப்புள்ள வீடுகள், கடைகள், ஆறு கோடி மதிப்பில் ரிசார்ட் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*