திருப்பதிக்குச் சென்ற நடிகைக்கு ஏற்பட்ட துயரம்…. வீடியோவை வெளியிட்டு புலம்பு நடிகை…. பெரும் அதிர்ச்சி….

உத்தரபிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இருப்பவர்தான் நடிகை அர்ச்சனா கௌதம். இவர் பல படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே கடந்த வியாழக்கிழமை இவர் திடீரென திருப்பதிக்கு சென்றுள்ளார்.அப்போது திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அலுவலகத்திற்கு தனது சிபாரிசு கடிதம் மூலமாக டிக்கெட் பெற முயற்சி செய்தார்.

அச்சமயத்தில் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அவருக்கு டிக்கெட் இல்லை என்று கூறி அநாகரிகமாக நடந்து கொண்டதாக நடிகை குற்றம் சாட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கிவிட்டு விஐபி டிக்கெட் 500 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அங்கிருந்து ஊழியர்கள் அர்ச்சனாவிடம் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஊழியருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அந்த ஊழியர்கள் அர்ச்சனாவிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். அதனை வீடியோவாக அர்ச்சனா எடுத்துள்ளார். மேலும் அதில் கதறி அழுத அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தில் இதுபோன்று நடப்பது ஆங்கில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் கவனத்திற்கு செல்ல வேண்டும் எனவும் இதற்கு விரைவில் உரிய நடவடிக்கை தேவை எனவும் பேசி இணையத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*