தீடிரென பெண் கெட்டப் போட்ட பிக் பாஸ் பிரபலம்… கமெண்ட்ஸ்-ல் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…

youtube சேனல்களில் திரை சார்ந்த பிரபலங்களை பேட்டி எடுத்து அதன் மூலம் பிரபலமானவர் தான் அபிஷேக் ராஜா. இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அதில் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது என்று கூட கூறலாம்.

அந்த அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை அலறவிட்டார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். அவ்வகையில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அபிஷேக் ராஜா பங்கேற்றுள்ள நிலையில், அந்த நிகழ்ச்சிக்காக பெண் வேடம் அணிந்து போட்டோ சூட் நடத்தியுள்ளார்.


அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலான நிலையில், இதில் இருப்பவர் யார் என்று கண்டுபிடிக்குமாறு ஜாலியாக விஜய் டிவி கேள்வி எழுப்பி உள்ளது. இதனை நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்து அபிஷேக் ராஜாவை கலாய்த்து வருகிறார்கள்…