
தென்னிந்திய தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வளம் வந்தவர் நடிகர் பாண்டு , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது , இவர் நடிகர் மட்டும் அல்ல ஒவியரும் ஆவார். இவர் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் அதிகம் நடித்துள்ளார். இவருடைய சகோதரர் இடிச்சப்புளி செல்வராசு என்பவரும் நகைச்சுவை நடிகராவார்.
இவர் திரைப்படங்களோடு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தினம் தினம் தீபாவளி, உறவுகள் சங்கமம், வள்ளி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.சிறந்த ஓவியரான பாண்டு எழுத்துகள் வடிவமைக்கும் கலைஞராக இருந்தார். பிரபல நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் பாண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உ யிரிழந்தார்,
பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். அதில் ஒரு மகன் வெள்ளச்சி என்ற திரைப்படத்தில் கூட நடித்துள்ளார் , அதற்கு பிறகு திரைப்பட வாய்ப்பு கிடைக்காததால் திரை துறையை விட்டே விலகி விட்டார் , தற்போது அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது , இதோ அவரது புகைப்படம் ..
Leave a Reply